• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் கருத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட கருத்திட்டங்கள்

நிறைவேற்றப்பட்ட கருத்திட்டங்கள்

வட-மத்திய மாகாணங்களிலுள்ள கைம்பம்பி குழாய்க்கிணறுகளின் மறுசீரமைப்பு - 2005
  • இந்த கருத்திட்டத்தின்கீழ், அனுராதபுரம் மற்றம் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள 100 குழாய்க்கிணறுகள் சுத்தஞ்செய்யப்பட்டு, கைப்பம்பிகள் மறுசீரமைக்கப்பட்டன. யப்பானிய தூதரகம் இந்த நிகழ்ச்சித்திட்டத்துக்கான நிதியுதவியை வழங்கியது.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    8.5அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள 25,000 சனத்தொகையினர் பயனடைந்தனர்.
மாலோ ஆறு நீர் முகாமைத்துவத்துக்கான தரைகீழ் நீர் கண்காணிப்பு - 2004
  • இந்த கருத்திட்டத்தின்கீழ், நீர்மாதிரிகள், பிரதான இரசாயன வழியலகுகளுக்காகப் பகுத்தாயப்பட்டன.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    0.6பயன்பாட்டிற்காக, தரைகீழ் நீரின் ஆற்றலின் கணிப்பீடு.
அனுராதபுர மாவட்டத்தின் கிணறு கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டம்
  • இந்த நிகழ்ச்சித்திட்டம், விவசாய அபிவிருத்தி அதிகார சபையுடன் சேர்ந்து மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டது. கருத்திட்டத்திற்குட்பட்ட பிரதேசத்தில் நீரின் தரத்தில் ஏற்படும் வேறுபாடுகளைக் கற்பதற்கு தெரிவுசெய்யப்பட்ட கிணறுகளிலிருந்து 94 நீர் மாதிரிகள் மாதந்தோறும் பகுத்தாராயப்பட்டன. இந்தச் செயலானது 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 2001ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டது.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    0.5இம்மாவட்டத்தில் நிலைபெயரா அபிவிருத்திக்காக, தரைகீழ் நீர் வளங்களின் முகாமைத்துவமும் கட்டுப்பாடும்.
தரைகீழ் நீர் வள தகவல் அபிவிருத்தி
  • 1995ஆம் ஆண்டு தொடக்கம் பின்வரும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆழமான சிறு துளைகள் குறித்த தொழினுட்ப மற்றும் இரசாயன தகவல்களை கணனி மயப்படுத்தலும் கிணறுகளைக் கண்காணித்தலும், ஆழமான சிறு துளையுள்ள இடங்களை விரலியிடல் மற்றும் வரைபடங்களை நாளதுவரை பதிவு செய்தல். சகல பதிவுகளிலும் உள்ள இடைவெளிகளைப் பூர்த்தி செய்து அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் கணனியிலுள்ள தகவல்களை தாளில் அச்சிட்டுப் பெறல்.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    15.0தரைகீழ் நீர் வங்கி வசதிகளை நாளதுவரை பதிவு செய்தல் மற்றும் எதிர்கால தரைகீழ் நீர் அபிவிருத்தி சேவைகளுக்கான GIS.
வவுனியா மாவட்ட குழாய்க் கிணறுகள் (1996-2005)
  • வவுனியா மாவட்டத்திலுள்ள அகதிகள் குடியிருப்புகளுக்காக கையினால் இயக்கப்படும் குழாய்க் கிணறுகளை முதலீடு செய்தலும் நிர்மாணித்தலும். இந்த கருத்திட்டங்கள் 1996ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    11.3அகதிகள் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கல்.
வட- கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு கைப்பம்பி குழாய்க்
  • இக்கருத்திட்டமானது விவசாயம், சந்தைபடுத்தல், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கல்வி தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் 2005 இல்  வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் குழாய்க் கிணறு   நிர்மாணித்தல் மேற்கொள்ளப்பட்டது .  
அம்பாந்தோட்டை வறட்சி நிவாரண கருத்திட்டம் - 2001
  • இந்த கருத்திட்டத்தின்கிழ், கைப்பம்பிகளுடன் இணைக்கப்பட்ட ஆழமான குழாய்க்கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டு, அவை நீர்வழங்கல் அலகுகளுக்கு மாற்றியமைக்கப்பட்டன.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    7.4அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ஏறத்தாழ 10,000 சனத்தொகையினர் பயனடைந்தனர்.
தாழ் மலால, வளவை மற்றும் கிரிந்தி ஓய ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் வண்டல் சார்ந்த நிரேந்தி வளங்களி.
  • திறைசேரி நன்கொடை செயல்திட்டத்தின் கீழ், பாறை பற்றிய அறிவியல், புவி பௌதீகவியல், கிணற்றுப் பண்புகள் மற்றும் சோதனை பம்பிகள் சார்ந்த பயன்படத்தக்கதாக உள்ள கிணறு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. நீர் மாதிரிகள் பகுத்தாராயப்பட்டன. இந்த கருத்திட்டமானது, 1999 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு 2001ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டது.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    0.86பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதற்காக தரைகீழ் நீர் ஆற்றலின் கணிப்பீடு.
வடகிழக்கு மாகாணத்தில் IFAD மற்றும் ADB விவசாய கிணறு நிகழ்ச்சி
  • இது ADB மற்றும் IFAD இனால் நிதியுதவியளிக்கப்படட ஒரு நீர் வள அபிவிருத்திக் கருத்திட்டமாகும். 1995 தொடக்கம் 1998வரையான காலப்பகுதியில், விஞ்ஞான ஆய்வுகள் மூலம் 2077 இடங்கள் தெரிவுசெய்யப்பட்டு நீர் மாதிரிகள் பகுத்தாராயப்பட்டன.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    3.0விவசாயத்திற்கான நீர் மூலங்களின் நிலைபெயரா மற்றும் உச்ச அளவு பயன்பாட்டுக்காக, விவசாய கிணறுகளின் தன்மையைக் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
கொக்கலையின் தரைகீழ் நீர் வழங்கும் திட்டம் (ஏ.பி.வ) (2004)
  • கொக்கலை ஏற்றுமதி பதனஞ் செய்யும் வலயத்துக்காக நீர் வழங்கல் மற்றும் தொடர்பான கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகள்.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    4.0கைத்தொழில் முயற்சிகளுக்கு நீர் வழங்கல் 20,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு துணை சேவை அலகு.
<< Start < Prev 1 2 3 4 Next > End >>