• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் கருத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட கருத்திட்டங்கள்

நிறைவேற்றப்பட்ட கருத்திட்டங்கள்

வவுனியா மாவட்டத்தில் கிணறு கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டம்
  • திறைசேரி நன்கொடை செயல்திட்டத்தின்கீழ், 1999ஆம் ஆண்டு தொடக்கம் அகதிகள் மீள் குடியிருப்பு மற்றும் சனநெருக்கடியான நகர்ப்புற பிரதேசங்களை உள்ளடக்கிய, தெரிவு செய்யப்பட்ட 85 கிணறுகள் கண்காணிக்கப்பட்டு, பகுத்தாயப்பட்டன. தரைகீழ் நீரின் தரம் மற்றும் தரைகீழ் நீர்மட்ட ஏற்ற இறக்கத்தின் தன்மையின் தற்காலிக வேறுபாடுகளை பதிவுசெய்வதே கண்காணிப்பின் நோக்கமாகும்.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    6.5இந்த மாவட்டத்தில், நிலைபெயரா அபிவிருத்திக்காக தரைகீழ் நீர் வளங்களின் முகாமைத்துவமும் கட்டுப்பாடும்.
குளியாப்பிட்டிக்கான நீர்வழங்கல் வசதிகள்
  • குளியாப்பிட்டி பட்டணத்திற்கும் மற்றும் சோமாவதிய சத்ய என்னும் இடத்திற்கும் தரைகீழ் நீர் கணிப்பீடு செய்தல் மற்றும் நீர்வழங்கல் வசதிகளை அளிப்பதுடன் குழாய்க்கிணறுகளை துளையிடுதல்.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    3.2குளியாப்பிட்டியிலுள்ள 30,000 சனத்தொகையினரும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களும் மற்றும் சோமாவதிய இடத்திலுள்ள ஏனையோரும் பயனடைந்தனர்.
நீர் வள முகாமைத்துவ கருத்திட்டம்
  • கருத்திட்டத்தின்கீழ் தெதுரு ஓய ஆற்றுப்பள்ளத்தாக்கில் தரைகீழ் நீர் கண்காணித்தல் மற்றும் கணிப்பீடு கற்கை. (2002-2003)

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    8.77தெதுரு ஓய பள்ளத்தாக்கிற்குட்பட்ட முழுமையான அபிவிருத்திக்கான பயன்படத்தக்க தரைகீழ் நீர் ஆற்றலின் கணிப்பீடு / எதிர்கால கருத்திட்டத்தை திட்டமிடல்
மொனராகலை மாவட்டத்தில் குழாய்க்கிணறு நிர்மாணிப்பு
  • N.W.S மற்றும் D.B கருத்திட்டத்தின்கீழ், 2004 தொடக்கம் 2005 வரையான காலப்பகுதியில், குடிநீர்த் தேவைக்காக 73 குழாய்க்கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டன.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    2.4மொனராகலை மாவட்டத்திலுள்ள 20,000 சனத்தொகையினர் பயனடைந்தனர்.
மன்னார் மாவட்டத்தின் 2005ஆம் ஆண்டில் மான்ரிகப் கருத்திட்டம் (JICA)
  • மன்னார் மாவட்டத்தில் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்காக குழாய்க்கிணறு நிர்மாணித்தல்.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    6.3மன்னார் மாவட்டத்திலுள்ள மன்னாரிலும் மாந்தை கிழக்கிலுமுள்ள 10,000 சனத்தொகையினர் பயனடைந்தனர்.
அத்தனகல்ல ஓய ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ் பகுதியில் தரைகீழ் நீர் வளங்களின் கற்கைநெறி
  • 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு, பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன: ஆழமான சிறுதுளைகள் குறித்தான தொழினுட்ப மற்றும் இரசாயன தகவல்களும், மழைவீழ்ச்சி பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன. புவிப் பௌதீக ஆய்வுகளும் ஆழமான சிறுதுளைகளின் நிர்மாணமும் மேற்கொள்ளப்பட்டன. நீர்ப்புவியியல் வரைபடங்களும் இடைக்கால் அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டன. இந்த கருத்திட்டமானது 2001ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டது.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    3.3பயன்பாட்டிற்கான தரைகீழ் நீர் ஆற்றலின் கணிப்பீடு.
புத்தளம் மாவட்டத்தில் திறைசேரி நன்கொடை கருத்திட்டம்
  • 1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்திட்டமானது, புத்தளம் மாவட்டத்தில் இறால் பண்ணைப் பகுதிகளில் ஒரு தரைகீழ் நீர் கண்காணிப்பு வலையத்தை செயல்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது. கருத்திட்டம் 2002ஆம் ஆண்டில் பூர்த்தியாக்கப்பட்டது. கிணறுகள்; EC நீர்மட்டம் மற்றும் உலர்தன்மைக்காக மாதாந்தம் கண்காணிக்கப்பட்டது.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    2.88பெருமளவு தரைகீழ் நீர் ஆற்றலுடைய இடப்; பகுதிகளில் நிலைபெயரா அபிவிருத்திக்காக தரைகீழ் நீர் வளங்களின் முகாமைத்துவமும் கட்டுப்பாடும்.
பெருமளவு நீரினை வெளியேற்றும் குழாய்க் கிணறுகள் (2000 தொடக்கம் 2003 வரை)
  • இரத்தினபுரி, புத்தளம், குருநாகல் மற்றும் அம்மாந்தோட்டை மாவட்டங்களிலுள்ள நீர் வழங்கல் நிலையங்களுக்காக குழாய்;க்கிணறுகளை அமைத்தல்.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    7.55ஏறத்தாழ 20,000 மக்கள் பயனடைந்தனர். இந்த மூலங்கள் நீரின் அழுத்தத்திற்குட்பட்ட மக்களின் நிவாரணத்துக்காக, கடுமையான வரட்சி நிலவும் காலங்களில் தக்க விதத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
தரைகீழ் நீர் வளங்களைக் குறித்த வெள்ளோட்ட கற்கை நெறி- CRI கருத்திட்டம் (2003-2004)
  • இந்த கருத்திட்டத்தின்கீழ், குருணாகல் மாவட்டத்தில் நீர் புவியியல் ஆய்வுகளும் துளையிடும் சோதனை குழாய்க்கிணறுகளின் நிர்மாணமும் மேற்கொள்ளப்பட்டன தரைஇறக்கம்.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    2.8இந்த மாவட்டத்தில், நிலைபெயரா அபிவிருத்திக்காக, தரைகீழ் நீர் வளங்களின் முகாமைத்துவமும் கட்டுப்பாடும்.
B.O.I இற்கான குழாய்க்கிணறு நிர்மாணிப்பு
  • இந்தக் கருத்திட்டத்தின்கீழ், 2004ஆம் ஆண்டில் கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 15 குழாய்க கிணறுகள் நிர்மாணிக்கப்பட்டன.

    நிதி(மில்லியன்)பயனுகரிகள்
    5.0பன்னாலை, பூகொடை, ஹெனகம பகுதிகளில் ஏறத்தாழ 25,000 மக்கள் பயனடைந்தனர்.
<< Start < Prev 1 2 3 4 Next > End >>