• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் பிரிவுகள் பொறியியல் பகுதி

Construction and Maintenance Unit

Water Pollution Control and Management

புவியியல் தகவல் முறைமைக் கூறு (GIS Unit)
இது, தற்போது பாரிய ஒரு நோக்கெல்லையைக் கொண்ட சிறிய ஒரு பிரிவாகும்.

நிலக்கீழ் நீர் ஆய்வு தொடர்பான வெளியான, வெளி அல்லாத, அதேபோல் தற்கால தரவுத் தளத்தை தரமுயர்த்தலும் இற்றைப்படுத்தலும்.
இன்றுள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் எதிர்கால திட்டமிடலுக்கும் புவியியல் தரவுகளின் தொகுதிகளை உள்ளடக்கிய வரைபடங்களைத் தயாரித்தல், நிலக்கீழ் நீர் தேராய்வு, பயன்பாடு ஆகியன தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளல்.
இலங்கையில் அளவுசார்ந்த, பண்புத்தரம் சார்ந்த நிலக்கீழ் நீரியல் செயன்முறைகள் உருவாகும் நிலைமைகள் குறித்து பகுப்பாய்வு செய்தல்.
மேற்சொன்ன விடயங்களின் அடிப்படையில், இலங்கையில் நிலக்கீழ் நீர் பற்றிய காத்திரமான நிலப்பட ஏடொன்றைத் தயாரித்தல்.
நீர் வள சபையின் குழாய் நீர்க் கிணறுகள் குறித்த தரவுத் தளத்தை இற்றைப்படுத்தும் நோக்கில் குழாய் நீர்க் கிணறுகள் பற்றிய தொழினுட்ப ரீதியான, இரசாயன ரீதியான தரவுகளைத் திரட்டுதல்.
மேற்றள நீர், நிலக்கீழ் நீர் ஆகியவற்றுக்கு இடையிலான ஒன்றிய வாழ்வுத் தொடர்பு குறித்து ஆய்வு செய்தல்.
டிஜிட்டல் தரவுத் தளத்தைத் தரமுயர்த்துமுகமாக கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் கூடுதலான காலமாக மேற்கொள்ளப்படும் நிலக்கீழ் நீர் ஆய்வின் அனலொக் வரைபடங்களை டிஜிட்டல் வடிவில் ஸ்கான் செய்தல் (ளுஉயnniபெ)
நீர் வள சபையின் (றுசுடீ) இணையத் தளத்தை வடிவமைத்தலும் இற்றைப்படுத்தலும்.

ஆய்வுகூடம்
இயல்பு, வெப்பநிலை, NTU அலகுகள் மூலம் நீரின் கலங்கற்றன்மைப் பெறுமானம், PH பெறுமானம்., மின் கடத்துதிறன், பூரண காரவியல்பு, மொத்த கரைந்த திண்மம், சோடியம், பொற்றாசியம், கல்சியம், மக்னீசியம், முழு இரும்புச் சத்து அளவு, புளோரைட்டு, சல்பைட், குளோரைட்டு, உவர்ப்பு, நைத்திரரேற்று அளவு முதலியவற்றின் அடிப்படையிலான இரசாயனப் பகுப்பாய்வு.
முழு கொலிபோம் பக்றீரியா எண்ணிக்கையும் ஈ கோலி பக்றீரியா அளவுப்படி நுண்ணியிரியியல் பகுப்பாய்வை மேற்கொள்ளலும்.
அந்திமணி, அலுமினியம், ஆசனிக், பேரியம், பீஸ்மத், கடமியம், குரோமியம், செம்பு, ஈயம், மங்கனீஸ், இரசம், நிக்கல், ஸ்ரோன்றியம், செலேனியம், வெள்ளி, ரின், நாகம் முதலிய பார உலோகங்கள் தொடர்பான பகுப்பாய்வை மேற்கொள்ளல்.


மின்சார பொறியியல் வேலைத் தளம்

சபையானது கற்று வலுவின் ஆராய்ச்சி அபிவிருத்தி திட்டத்திற்காக ஒரு குறிபிட்ட

வரையறையுள்ள வேலைத்தள வசதிகளுடன் ஸ்தாபிக்கப்பட்டது . தற்போது வேலைத்

தளமானது  போக்குவரத்து வாகனங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் யாவற்றையும் பராமரிக்கவும்

மற்றைய சிறிய தேவைகளுக்காகவும் சபையின்  தேவைகளை  பூர்த்தி செய்யவும்    மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

12500  சதுர அடியை தளமாகக் கொண்ட வேளைதளமானது  பின் வரும் மூன்று உப பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளது.

(அ)  திருத்துதலும் பராமரிப்பு பகுதியும்

(ஆ) கனரக வாகனங்களுக்கும் இயந்திரங்களுக்குமான பகுதி

(இ)  வெல்டின்கிற்கும்   இயந்திரத்துக்குமான பகுதி

Last Updated (Tuesday, 05 February 2013 07:03)