• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் பிரிவுகள் நடவடிக்கைப் பிரிவு
குறித்த பிரிவுகளின் ஆலோசனையுடன் மாதாந்த தொழினுட்ப முன்னேற்ற அறிக்கைகளைத் திரட்டுதலும், காலாண்டு செயலாற்றுகை அறிக்கைகளையும் வரைவு வருடாந்த அறிக்கையைத் தயாரித்தலும்.

இயந்திர பொறியியல் வேலைத்தளம் (இணைப்பு ஐஐ), புவியியல் தகவல் முறைமை (புஐளு) கூறு, நீர் வள சபையின் தலைமை அலுவலகத்தின் ஆய்வுகூடம் என்பவற்றை நுண்ணிப்பாகக் கண்காணித்தலும் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும்.

வாடிக்கைகாரர்களுடனான சிறந்த உறவைக் கட்டியெழுப்புதலும், நிலக்கீழ் நீர் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட வியாபார வாய்ப்புகளை விருத்தி செய்தலும்.

நீர்ப் புவிச்சரிதவியல் அளவைகளும், அகழ்வு சார்ந்த நிர்மாணிப்புகளும் (டிழசநாழடந உழளெவசரஉவழைளெ) கிணறுகளைச் சுத்தம் செய்தல், பம்புதல் பரிசோதனை, நீர் மாதிரிகளின் பகுப்பாய்வு, பிற நீர்ப் புவிச்சரிதவியல் சார்ந்த அலுவல்களுக்கான மதிப்பீடுகளைத் தயாரித்தலும்.

வழங்கல்களைக் கண்காணித்தலும் தேவையான உபகரணங்கள், பொருள்களின் வழங்கலை உரிய முறையில் பேணிச் செல்லலும்.

பூர்த்திசெய்த வேலை விவரப் பட்டியல்களை நிதிப் பிரிவுக்கு அனுப்புதல்.

சிவில், மின்சார, குழாய்நீர் பழுதுபார்ப்புகள், நிலமாதிரி அமைப்புகள் (வீட்டுத்தோட்ட, பூங்கா வடிவமைப்பு) துப்புரவேற்பாட்டு முறைமை போன்ற மனித வள முறைமைகளை சிறந்த முறையில் பேணிச் செல்லல்.

அரச முகவராண்மைஃ அதிகார சபைக்காக சிறிய அளவிலான நீர்; வழங்கல் திட்டங்களை நிறுவுதல், கையேற்றல் (உதாரணமாக: பூணா கடற்படை முகாம், பாதுகாப்பு அமைச்சு, மலே வீதி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் - கொலொன்னாவை, முதலீட்டுச் சபை - கொக்கலை, ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக போன்ற நிறுவனங்களின் வேலைகள் பூர்த்த செய்யப்பட்டு வருகின்றன.)

துளையிடு பிரிவு
ஆழ் குழாய் நீர்க் கிணறுகளை அமைத்தல்.

குழாய் நீர்க் கிணறுகளுக்கான கைப் பம்பிகள் / ஆழ்த்தக்கூடிய பம்பிகளை நிறுவுதல்.

நீர்ப் புவிச்சரிதவியல்; பிரிவின் ஒத்துழைப்புடன் சிறிய நீர் வழங்கல் திட்டங்களுக்கான குழாய் பரப்பி இணைத்தல்.

துளையிடு உபகரணங்களையும் கொம்பிரசர்களையும் திருத்துதலும் பராமரித்தலும்.

இரத்மலானை தொழிற்சாலையின் ஆலோசனையுடன் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

Last Updated (Thursday, 07 February 2013 08:06)