• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் பிரிவுகள் நீர்ப்புகர்ப்பவியல் பிரிவு
இன்றைய செயற்பாடுகள்
நிலக்கீழ் நீர் வளத்தை மதிப்பீடு செய்தல்.

சிறுநீரக நோய்கள் பரம்பலடைந்து / பரம்பலடையாமல் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் அதன் மீது பாதிப்புச் செலுத்தியுள்ள காரணிகளையும் அவற்றின் பிரதிவிளைவுகளையும் நிர்ணயிக்கும் பொருட்டு 3 ஆண்டு காலம் பூராகவும் சுகாதாரத் துறையிலும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் உள்ளிட்ட குறித்த அதிகாரபூர்வ நிறுவனங்களுடன் மிக நெருங்கிய ஒத்துழைப்பைப் பேணி கள செயற்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ளல்.

குறுகிய கால பம்புதல் பரிசோதனைகளை மேற்கொள்ளலும் நீர் வளங்களுக்கு (குழாய் நீர்க் கிணறுகள், கிணறுகள், தூய நீர் ஊற்றுகள் முதலியவற்றுக்கு) குறித்த பாதுகாப்பான பம்பும் விகித பெறுமானங்களை நிர்ணயித்தல்.

நிலக்கீழ் நீர் கண்காணிப்பு வலையமைப்புகளைத் திட்டமிடலும், நீரின் தரம், நீர் மட்டம் என்பவற்றின் மீது விசேட கவனம் செலுத்தி நிலக்கீழ் நீர் கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தலும்.

அநுராதபுரம், கொரகஹவௌவில் அமைந்துள்ள ஆராய்ச்சி, பயிற்சி மத்திய நிலையத்தில் நடாத்தப்படும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் சிவில் சமூக அங்கத்தவர்களுக்கு மத்தியில் நிலக்கீழ் நீர் வளத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
 
தற்போதைய இயலளவு
நீரேந்து படுகை பண்புகள், நீரேந்து படுகை வாய்ப்புகள், காலத்துடன் இசைவாக நிலக்கீழ் நீர்pன் கிடைப்பனவு தன்மையை இனங்காணும் பொருட்டு நீர்ப் புவியியல் / புவிப் பௌதிக அளவைகளை நடாத்துதல்.

சிறப்பான நீரேந்து படுகைகள் மற்றும் நிலக்கீழ் நீர் வளமூலங்கள் பாயும் மாதிரிகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளல்.

நீர்த்துறை சார்ந்த பிரச்சினைகள் மீதான சுற்றாடல் தாக்கத்தை மதிப்பீடு செய்தல்.

நீரின் பண்புத்தரம் குறித்த விரிவான ஆய்வுவை மேற்கொள்ளல்.

செயலமர்வுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் முதலியவற்றின்போது ஆய்வு முடிவுகளை முன்வைத்தலும் சரியிணை புத்தூக்க ஆராய்ச்சிக் கற்கைகளை வெளியிடுதலும்.

நீர் வளங்கள் சார்ந்த தரவுப் பகுப்பாய்வும் உரிய பருவ அறிக்கைகளைத் தயாரித்தலும்.

நிலக்கீழ் நீர் வரைபடங்களையும் நீர் இரசாயன வரைபடங்களையும் தயாரித்தல்.

நிலக்கீழ் நீரை புத்துயிர்ப்பூட்டுவதுடன் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

மாகாண அலுவலகங்கள்

அநுராதபுரம்
வடக்கு கிழக்கு மாகாணம் போன்றே, சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்குச் சேவை ஆற்றும் பொருட்டு 2007 செப்டம்பர் மாதத்தில் இந்த அலுவலகங்கள் நிறுவப்பட்டன. அதன் பிரதான பணிகளாவன:

அநுராதபுரம், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நீர்ப் புவிச் சரிதவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.

வரையறுத்த ஒரு வளமாகக் காணப்படும் நிலக்கீழ் நீரை மிகக் கவனமாகப் பயன்படுத்துதலும் பொருளாதார மற்றும் சமூகப் பணிகளுக்காக நீர் மாசுறாமல் பயன்படுத்துவதன்பால் மக்களைத் தூண்டுதலும்.

குறிப்பாக, உலர் வலயத்தில் நீர் சார்ந்த சுகாதார உபத்திரவங்களைக் குறைப்பதற்காக அநுராதபுரம், கொரகஹவௌ பயிற்சி மத்திய நிலையத்தில் விழிப்பூட்டல் / பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.

'ஜல சாயன' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமூகத்தின் நலன் கருதி நீர் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள், நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தல், கட்டணம் அறவிடாமல் நீர் வடிகட்டிகளை விநியோகித்தல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.

காட்சிப்படுத்தும் நோக்கில் போன்றே, கிராமப்புற சமூகத்தவருக்கு தொழினுட்பத்தை வழங்குவதற்காக பேண்தகு நீர் மற்றும் கமத்தொழில் மாதிரிகளை அமைத்தல்.

பயன்படுத்தப்படும் நீரின் அளவை மட்டுப்படுத்துவதற்கும் மனிதனின் இருப்பிற்கு ஊறுவிளைவிக்கும் நீர்pன் பண்புத்தரம் குன்றுவது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மாகாண அலுவலகம் போதுமான அளவு தயார்நிலையில் உள்ளது. குறித்த பணிக்காக கொரகஹவௌ பயிற்சி மத்திய நிலையம் உதவி அளிக்கின்றது. அது மாத்திரமன்றி, நீரைச் சுத்திகரிப்பதற்கான பாரம்பரிய முறைகள் தொடர்பாகவும் இந்த அலுவலகம் மூலம் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

புத்தளம்
புத்தளம் பிராந்திய அலுவலகம், 1979 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. சுண்ணாம்புக் கற்கள், திண் கற்பாறைகளில் காணப்படும் நிலக்கீழ் நீர் வளம் தொடர்பாக ஆய்வு செய்தல், பயன்படுத்துவதற்கு உரிய நிலக்கீழ் நீர் அபிவிருத்திச் செயற்பாடுகள் இந்த அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். அரச / அரச சார்பற்ற அமைப்பாண்மைகளினாலும் தனியார் துறையினராலும் முடுக்கிவிடப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக ஆழ் குழாய் நீர்க் கிணறுகளை அமைப்பதிலும் இந்த அலுவலகம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிராமிய நீர் வழங்கல், இறால் வளர்ப்பு, மட்டுப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனக் கமத்தொழில், கைத்தொழில்கள், சகல வீட்டுத் தேவைகள் என்பவற்றை நிறைவுசெய்வதும் இதில் அடங்கும். தலைமை அலுவலகத்தில் நீர்ப் புவிச்சரிதவியல் பிரிவின் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு பிராந்திய அலுவலகததின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மொணராகலை
நீண்ட காலமாக செயற்பாடற்றுக் கிடந்த பிராந்திய அலுவலகம் சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் மக்களுக்குச் சேவை ஆற்றுவதற்காக மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.

நூலகம்
குறிப்பாக, நீரியல்துறை சார்ந்த, 13 வகுதிகளின் கீழ் அடங்கும் 1810 புத்தகங்களைக் கொண்ட நூலகமொன்று பேணப்பட்டு வருகிறது. இந்த நூலகம் தொடர்ந்தேர்ச்சியாக இற்றைவரைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

Last Updated (Wednesday, 03 July 2013 05:24)